இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் – நிசா
இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசிய பிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தேர்தல்களிலும் இலங்கையில் ஜனநாயக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மாற்றங்கள் ஏற்படுவதனை அமெரிக்கா வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறெனினும், இலங்கையில் பல்வேறு விடயங்கள் ஆற்றப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.