புலிகளை அழிக்கும் வேலையில் எரிக்சொல்கைம் ஈடுபட்டார்! (காணொளி இணைப்பு)
தமிழ்மக்களின் அழிவுகளில் உலக நாடுகளுக்கும், எரிக்சொல்கைமுக்கும் பெரிய பங்கு உண்டு என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தொலைக்காட்சி ஒன்றில் நடந்த அரசியல் கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பேச்சுவார்த்தை நடைபெற்ற நேரத்தில் மறுபுறமாக விடுதலைப் புலிகளை இயக்கம் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்து. உண்மையில் சமாதானத்தை விரும்பும் தரப்புகளாக ஐரோப்பிய நாடுகளோ, எரிக்சொல்கைமோ இருக்கவில்லை. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு மறுபுறம் விடுதலைப் புலிகளை அழிக்கும் வேலையை எரிக்சொல்கைம் போன்றவர்கள் ஈடுபட்டார்கள்.
முழுமையான காணொளி இணைப்பு