கண்ணிவெடிகளை தடைசெய்யும் ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடுவதாக இலங்கை அறிவிப்பு
கண்ணிவெடிகளைத் தடை செய்யும் ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஜெனிவாவில் நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய ஐ.நாவுக்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தில் கையெழுத்திட இன்று காலை நடந்த இலங்கையின் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
கண்ணிவெடிகளை பயன்படுத்துவது, களஞ்சியப்படுத்துவது, உற்பத்தி செய்வது, மற்றும் பரிமாற்றம் செய்வதை தடை செய்வதற்கு இதன் மூலம் இலங்கை இணங்கியுள்ளது.
2997ஆம் ஆண்டு ஒட்டாவா பிரகடனம் வெளியிடப்பட்டது. எனினும், அந்த உடன்பாட்டில் கையெழுத்திட இலங்கை மறுத்து வந்தது. தற்போது சிறிலங்கா இந்த உடன்பாட்டில் இணைந்து கொள்ள முடிவு செய்துள்ளது. இதுவரையில் ஒட்டாவா பிரகடனத்தில் 168 நாடுகள் இணைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.