ஊடகவியலாளர்கள் போன்றே அரசியல்வாதிகளுக்கும் உரிமை உண்டு
ஊடகவியலாளர்களுக்கு செய்திகளை பிரசுரிப்பதற்கான உரிமை இருப்பது போன்றே அரசியல்வாதிகளுக்கும் கருத்து வெளியிடும் உரிமை இருப்பதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பல்கலைக்கழக நியமனம் சம்பந்தமாக ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் வினவிய போது அந்த ஊடகவியலாளரை அமைச்சர் திட்டிய சம்பவம் குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். ஊடகவியலாளர்களுடன் தனக்கு எந்தவித முரண்பாடுகள் இல்லை என்று கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அமைச்சர் கூறியுள்ளார்.