இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்ப ராஜீவ் முடிவெடுக்கவில்லை – சுப்பிரமணியன் சுவாமி
இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்பும் முடிவை ராஜீவ் காந்தி தனி ஒருவராக எடுக்கவில்லை என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் ஏஎன்ஐ செய்தியாளரிடம் இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர்,”ராஜீவ் காந்தி கொலையாளிகளை தமிழ்நாடு அரசாங்கம் விடுவிக்க எடுத்துள்ள முடிவு பொறுப்பற்றதும், அரசியலமைப்புக்கு முரணானதுமான நடவடிக்கை.
தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதுவதை விட வேறு வேலை இல்லை.இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்ப ராஜீவ் காந்தி மட்டும் தனித்து முடிவெடுக்கவில்லை. அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தீர்மானத்தின் படியே இந்தியப் படைகள் அங்கு அனுப்பப்பட்டன.
ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க முனைபவர்கள் தேசியத்துக்கு எதிரானவர்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.