Breaking News

கிளிநொச்சி மகா வித்தியாலயம் முன்பாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு வினைத்திறன் மிக்கஅதிபர்ஒருவரை நியமித்து தருமாறு கோரி இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறுகிறது.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம், பாடசாலை கல்வியில் அரசியல் பழிவாங்கல் காணப்படுவதாகவும், கல்வியில் அரசியல் வேண்டாம் என வலியுறுத்தியும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு நியமிக்கப்பட்ட பிரதி அதிபரை இயங்கவிடாது கல்லூரியில் உள்ள அதிபர் செயற்பட்டு வருவதாகவும், குறித்த அதிபரினால் பாடசாலையை வளர்ச்சி போக்கிற்கு அழைத்து செல்ல முடியவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். 

தம்மை இதுவரை எந்தவோரு மக்கள் பிரதிநிதியோ அல்லது அதிகாரிகளோ வந்து பார்வையிடவில்லை எனவும், தொடர் போராட்டமாக தாம் இதை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.