Breaking News

தாங்க முடியா வெப்பத்தினால் மயங்கி வீழ்ந்தவர் உயிரிழப்பு

வெயிலின் கொடுமையை தாங்க முடியாது மயங்கி வீழ்ந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கிளிநொச்சி மருதநகரை சேர்ந்த அமிர்தலிங்கம் தர்ம தேவா ( வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினரைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். அன்று மதியம் திருநெல்வேலியில் உள்ள உறவினரைப் பார்ப்பதற்காக சைக்கிளில் சென்ற அவர் வெயில் கொடுமையை தாங்க முடியாது கடை ஒன்றில் ஒதுங்கி களைப்பாறியுள்ளார்.

அப்போது வீழ்ந்தவரை அங்கு நின்றவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் நீதிமன்ற பணிப்புரைக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டார். சட்டவைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.