தடுப்பு முகாமிலே கணவர் படுகொலை செய்யப்பட்டார்-மனைவி(காணொளி)
நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது தனது கணவனை
இராணுவத்தினரிடம் ஒப்படுத்திருந்த முன்னாள் போராளியொருவர் கடந்தவாரம் கொழும்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தனது கணவன் தடுப்பில் இருந்தபோது இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதாக அதிரடி சாட்சியம் வழங்கியுள்ளார்.
இறுதி யுத்தத்தின்போது படுகாயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்ற பின்னர் அவர்கள் கதிர்காமம் நலன்புரி நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு முன்னாள் போராளிகள் என இனம்காணப்பட்டிருந்தநிலையில் இருவரையும் கைதுசெய்ததாகவும் கைதுசெய்யும்போது ஒருமாதத்தில் விடுதலை செய்வதாக தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
முழுமையான காணொளி
ஆனால் 3மாதத்தின் பின்னர் 2009 நவம்பர் மாதம் 19ஆம் திகதி தனது கணவனை கம்பி வேலிக்கப்பால் வைத்து 10நிமிடங்கள் வரை பார்வையிட அனுமதித்தாகவும் தெரிவிக்கும் மனைவி. 5நாட்கள் கடந்து நவம்பர் 25ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையில் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறியதாகவும் தனது கணவன் மாரடைப்பால் இறக்கவில்லை என்றும் 24ஆம் திகதி இரவு இராணுவத்தினர் முகாமிலிருந்து விசாரணைக்காக அழைத்து சென்றதாக அவரோடுநின்ற போராளிகள் தெரிவித்திருக்கின்றனர்.
அத்தோடு அந்த வேளையில் வவுனியா வைத்தியசாலையில் இருந்த வைத்தியர் ஒருவர் அவர் மாரடைப்பால் இறக்கவில்லை என்றும் அதற்காக நீங்கள் சட்ட உதவியை நாடும்படியும் தெரிவித்தாகவும் ஆனால் அதற்காக நீதிமன்றம் செல்வதற்கு தனக்கு எந்த உதவியும் இல்லை என்றும் தற்போதுவரை சமுர்த்தி உதவிகூட நீங்கள் தமிழர்கள் தேசியத்துக்காக குரல்கொடுப்பவர்கள் எனக்கூறி மறுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த நேர்காணலின்போது தெரிவித்துள்ளார்.
முன்னைய காணொளிகள்
முன்னைய காணொளிகள்