யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பள உயர்வை அதிகரிக்க கோரி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் பத்தாம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளதாக ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
பாதுகாப்பு ஊழியர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும், பல்கலைக்கழகத்திற்கான நீர் வளங்களும் வழமைபோன்று இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.இதேவேளை பரீட்சைக்கிளையினால் நடாத்தப்படும் நுண்கலைத்துறை மற்றும் விஞ்ஞான பீடப் பரீட்சைகளுக்கான அங்கத்தவர்களும் கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.