ஊவா பல்கலையில் மோதல்! -ஆறு தமிழ் மாணவர்கள காயம்
துளை - ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு, வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
எனினும் அவர்களது பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.