கூட்டு எதிர்க்கட்சியின் ஜெனீவா முறைப்பாட்டுக்கு பதில் கிடைக்கவுள்ளது!
கூட்டு எதிர்க்கட்சியினர் ஜெனீவாவில் செய்த முறைப்பாட்டுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கப்படவுள்ளது.கூட்டு எதிர்க்கட்சி எதிர்நோக்கியுள்ள நிலைமை அனைத்து நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.தமது உரிமைகள் முடக்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாடு தொடர்பில் இரண்டு வாரங்களில் பதிலளிப்பதாக அனைத்து நாடாளுமன்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் மாடீன் சுன்கொங் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.கூட்டு எதிர்க்கட்சியின் 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் தமது உரிமைகள் முடக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.இதேவேளை, ஜெனீவாவில் அமைந்துள்ள அனைத்து நாடாளுமன்ற சங்கத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.