வடக்கில் படையினர் தயார் நிலையில்– யாழ்.தளபதி அறிவிப்பு
வடக்கில் எந்த அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் படையினர் தயார் நிலையில் இருப்பதாக, யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியில், வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் கருத்து வெளியிடுகையில்,
“ முழுமையான விசாரணைகளின் பின்னரே, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளியின் நோக்கங்கள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
ஆனாால், எந்த அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், படையினர் தொடர்ந்து மூலோபாய ரீதியாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.