யுத்த வலயத்தில் இருந்த காணிகளுக்கு உரிமை கோரலாம்!
எதிர்வரும் வாரத்தில் இந்த சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்து அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கைவிடப்பட்ட காணிகளுக்கு உரிமை கோரக் கூடிய வகையில் இவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும். பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக கைவிடப்பட்ட காணிகளையும் இவ்வாறு உரிமை கோர முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
பத்து ஆண்டுகளுக்கு கூடுதலாக காணியொன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டால் அந்தக் காணியை உரிமை கோர முடியாது என்பதே தற்போதைய சட்டமாகும். 30 ஆண்டுகால யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள இந்தப் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. யுத்தம் காரணமாக விவசாயம் செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட காணிகளை மீளவும் பெற்றுக்கொள்ள இந்த சட்ட திருத்தம் வழியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது