Breaking News

சாவகச்சேரி வெடிபொருள் விவகாரம் - விசாரணையில் இராணுவம் ஈடுபடாது

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டது தொடர்பாக, விசாரணைகளை நடத்த அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று, பாதுகாப்புச் செயலர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர்,

“தனியானதொரு சம்பவத்தை வைத்துக் கொண்டு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அரசாங்கத்தினால் முடிவுக்கு வர முடியாது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், கடந்த ஆறு ஆண்டுகளாக, படையினரும், காவல்துறையினரும், புலிகளின் ஆயுதங்களை மீட்டு வருகின்றனர்.

இந்த ஆயுதங்கள் தொடர்பாக காவல்துறை விசாரணைகளை மேற்கொள்ளும். சாவகச்சேரி விவகாரத்தை  இராணுவம் கையாளாது. விசாரணைகளை காவல்துறையே கையாளும்.” என்று தெரிவித்துள்ளார்.