கவிஞர் புதுவைக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை?
தமிழீழ விடுதலைப் புலிகளின் கலாச்சாரப் பிரிவு பொறுப்பாளராக கடமையாற்றிய புதுவை இரத்தினத்துரைக்காக ஏன் குரல் கொடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
புதுவை ரத்தினதுரைக்காக ஏன் தமிழ் கவிஞர்கள் கலைஞர்கள் குரல் கொடுக்கவில்லை என வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கவிஞர் செல்வகுமாரின் புதிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்ததின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த புதுவை இரத்தினதுரையை விடுதலை செய்யுமாறு தமிழ் கவிஞர்கள் கோரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுவை சிறந்த கவிஞர் எனவும், அவருக்காக கலைஞர்கள் குரல் கொடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.