Breaking News

கோதபாய அன்று செய்ய நினைத்ததை ரணில் இன்று செய்கின்றார் – ஆசிரியர் சங்கம்



முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அன்று செய்ய நினைத்ததை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று செய்கின்றார் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கமும் ஏதேச்சாதிகார போக்கில் செயற்பட்டு வருகின்றது.

கல்வி தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் போது அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி நிபுணர்கள், தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் வர்த்தமானி மற்றும் சுற்று நிருபங்கள் பின்பற்றப்படாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.