இலங்கை ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு நேற்று 149 ரூபாவைக் கடந்துள்ளது.
இலங்கை நாணயத்தின் மதிப்பு சடுதியாக குறையத் தொடங்கியுள்ளது. இலங்கை மத்திய வங்கியில் கடந்த திங்கட்கிழமை, 148.91 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை, நேற்று 149.54 ரூபாவாக அதிகரித்தது.
இதனால், இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை ரூபா இந்தளவுக்கு மோசமான வீழ்ச்சியை சந்தித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இலங்கை ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதால், இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.