தமிழர்கள் மீதான இன அழிப்பில் மைத்திரியும் துணை நின்றவர் – சிறீதரன்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ தமிழர்கள் மீது இன அழிப்பு செய்தபோது அவருக்கு துணை நின்றவர் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சிவஞானம் அண்மையில் இடம்பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்
தமிழ் மக்கள் குறித்த இருவரையுயம் எதிரியாகவே பார்க்கின்றனர் ஆனாலும் ஒரு எதிரியிடமிருந்து மாற்றத்தை ஏற்படுத்தவே தமிழ் மக்கள் மஹிந்தவை அகற்ரினரே தவிர மைத்திரிபால சிறிசேனவை விரும்பி அல்ல.
தமிழ்மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமானால் மைத்திரிபால இன்னும் இதயசுத்தியுடன் பல பணிகள் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதுடன், குறித்த செய்தியை அவர் தனது முகப்புத்தகத்திலும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.