Breaking News

எமது சோற்றில் நஞ்சை ஊற்றாதே-சம்பந்தனிடம் தாய் கதறல்(காணொளி)

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்க வேண்டாம்
எனக் கோரி பொதுமக்களால் இன்று புதன்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. மூதுார் கிழக்கு, கட்டைப்பறிச்சான் சாலையூர் பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த உண்ணா விரத போராட்டக்காரர்களிடம் கதைப்பதற்காக சென்ற எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்களுடன் பாதிக்கப்பட்ட பலபெண்கள் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு தங்கள் அபிலாசைகளையும் கொட்டித்தீர்த்தனர்.


எமது உணவில் ஏன் நஞ்சூற்றினாய், காணாமல் போன உறவுகளை மீட்டுத்தா? இதற்காகவா உங்களை நாடாழுமன்றம் அனுப்பினோம் என்ற கோரிக்கைகளை அந்த பெண்களில் சிலர் சம்பந்தன் அவர்களிடம் கேட்டிருந்தனர். தொடர்ந்தும் அவர்களுடனான வாய்த்தர்க்கம் கூடவே பாதுகாவலர்கள் சம்பந்தன் அவர்களை மக்கள் நெருங்காதவாறு காத்து பாதுகாப்பாக சம்பந்தரை அவ்விடத்திலிருந்து வெளியேற்றினர்.

'சூழலைப் பாதுகாப்போம்', 'எதிர்காலத்தைக் காப்போம், 'எமது சூழலைப் பாதிக்கும் அனல் மின் நிலையத்தை ஆரம்பிக்காதே!', 'இந்திய வல்லரசின் நன்மைக்காக எமது வாழ்வை அளிக்காதே!!' போன்ற பதாதைகளை போராட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.
பசுமை திருகோணமலை எனும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சம்பூர், கூனித்தீவு, சாலையூர், கட்டைப்பறிச்சான, சேனையூர், நவரெட்ணபுரம் போன்ற பல கிராமங்களில் இருந்து சமூகமட்ட அமைப்புகளின் பிதிநிதிகளும், சமூக செயலாளிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
 முன்னைய காணொளி செய்திகள்