கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக அதிகளவு விசாரணைகள்
யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள், மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் மூன்று ஆணையாளர்கள் உள்ளடங்களாக தற்போது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய விசாரணைகளின் போது கலந்து கொண்டு சாட்சியம் வழங்காதவர்களுக்கே சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 257 பேருக்கு சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விசாரனைகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விசாரனைகளின் போது கடந்த காலங்களில் மன்னார் மாவட்டத்தில் காணாமல் போன, கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக அதிகளவு விசாரணைகளும், பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.