கூகுள் நிறுவனத்தினால் வந்த சோதனை!
சாவகச்சேரி டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் உரிமையாளர் சுவிஸில் வசித்து வருகின்றார். இவர் 2012ஆம் ஆண்டு தனது சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்தார். அப்போது அவரின் வீட்டிற்கு முன்னால் வேப்பமரம் ஒன்று நின்றுள்ளது.
அவர் மீண்டும் சுவிஸிற்குச் செல்லும்போது வீட்டில் தனது உறவினர் முறையான ஒரு குடும்பத்தினை வாடகைக்கு குடியமர்த்திவிட்டுச் சென்றுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தினால் இலங்கையின் வீதி வரைபடமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து கூகுள் வரைபடத்தில் தனது வீட்டினை உரிமையாளர் பார்த்துள்ளார்.
அப்போது வீட்டிற்கு முன்னால் நின்ற வேப்பமரம் தறிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் வீட்டில் குடியிருந்தவரிடம் வேப்பமரம் எங்கே எனக் கேட்டுள்ளார்.
அதற்கு வாடகைக்கு குடியிருந்தவர், கடந்த 2014 ஆம் ஆண்டு பெய்த கடும் மழையினாலும் மோசமாக வீசிய காற்றினாலும் வேப்பமரக் கொப்பு ஒன்று மின்சார வயரின்மீது முறிந்து விழுந்ததால் மின்சார சபை அதனை தறிக்கச்சொல்லி கூறினார்கள். அதனால் அதனை தறித்துவிட்டோம் எனக் கூறினார்.
இந்தக் காரணத்தை ஏற்றுக்கொள்ளாத உரிமையாளர் வேப்பமரத்துக்கான பணமாக 50,000 இனை வங்கியில் வைப்பிலிடுமாறு தெரிவித்ததுடன், அவரை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையையும் எடுத்துவருவதாகத் தெரியவருகின்றது.