Breaking News

வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – யாழ் .தளபதி

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு மீண்டும் அச்சுறுத்தல் காணப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார்.

“பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம்” எனும் தொனிப்பொருளின் கீழ் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையில் தென்னிலங்கையில் இருந்து வடக்கு நோக்கி பயணித்துள்ள ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் பலாலி பாதுகாப்பு தலத்தில் விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடளின்போது தமிழ் சிங்கள ஊடகவியலாளர்கள் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதி ஊடகத்துறை அமைச்சர் மற்றும் முப்படை பிரதானிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆட்சிமாற்றத்தின் பின்னர் வடக்கின் நிலைமைகள் அச்சுறுத்தலாக உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் வடக்கு ஊடகவியலாளர்கள் மீதான பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பு தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.