Breaking News

கோட்டாபயவுக்கு எதிராக இருந்தவர் மஹிந்தவே?

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் வேட்பாளர்களாக கோட்டாபய ராஜபக்ஷயவையோ அல்லது சமல் ராஜபக்ஷவையோ கொண்டுவர வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்ட போதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் அந்த இரண்டு பேரையும் அப்பதவிக்கு விரும்பவில்லை என அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை பல்லேதலவின்ன ரதனஜோதி தர்ம வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியொன்றைப் பெற்றுக் கொடுக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடையே பல்வேறு முயற்சிகள் இடம்பெற்று வருவதாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

முன்னாள் பிரதமராக கோட்டாபயவைக் கொண்டுவருவதற்கு தற்போதைய ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவும் கடந்த மஹிந்த ஆட்சியில் விரும்பியே இருந்தார். ஆனால், இந்த பிரேரணைகளுக்கு முன்னிலையில் எதிர்ப்புத் தெரிவித்தவர் மஹிந்த ராஜபக்ஷவே ஆவார் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.