Breaking News

முல்லைத்தீவில் இன்று இறுதி நாள் விசாரணை!

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அமர்வின் இறுதிநாள் இன்றாகும்.

இன்று காலை 9 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகும் இந்த விசாரணைகளின் போது, முறைப்பாடுகளை மேற்கொள்ளவுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறும் இறுதி விசாரணை இதுவென்பதால், குறித்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு மக்களை ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், புதிய முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இன்றைய அமர்வின் பின்னர் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 28ஆம் திகதியும் வவுனியா மாவட்டத்தில் 29 மற்றும் 30ஆம் திகதிகளிலும் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச தெரிவித்துள்ளார்.