Breaking News

ஊடக அமைச்சருக்கு வவுனியா தமிழ் ஊடக சங்கத்தால் நூல்கள் கையளிப்பு

ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக வட மாகாணத்திற்கான விஜயத்தின் முதற்கட்டமாக இன்று(சனிக்கிழமை) வவுனியா மாவட்டத்திற்கு வந்தடைந்தார்.

இதன்போது புகையிரதத்தில் வருகை தந்த அவர் வவுனியா புகையிரத நிலையததில் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார்.

சுமார் 5 நிமிடங்கள் மாத்திரமே இடம்பெற்ற இந்த சந்திப்பில் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கதினால் யாழ் பொது நூலகத்திற்கு வழங்குவதற்கென ஒரு தொகுதி நூல்கள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், வட பகுதிக்கு ஊடக அமைச்சரின் விஜயம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஊடக அமைப்புகளுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும், வவுனியாவை புறக்கணித்து வடக்கிற்கான விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனையடுத்து வவுனியாவிற்கு பிறிதொரு தினத்தில் வருவதாக அமைச்சர், வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு உறுதியளித்திருந்தார்.