Breaking News

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வரட்சியான காலநிலை ஏற்பட்டுள்ளதையடுத்து, நீர்மின் உற்பத்தி 20 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையினைத் தொடர்ந்தே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘வரட்சி நிலை தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் மாற்று மின் உற்பத்தி திட்டத்தை நாடவேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலைமையை எதிர்கொள்வதாயின், மக்கள் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும், மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது. வரட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படும் வரையில், மின்பிறப்பாக்க செயற்பாடுகளை உரியவாறு முகாமைத்துவம் செய்வதற்கு எண்ணியுள்ளோம்’ எனவும் தெரிவித்துள்ளார்.