Breaking News

சுதந்திர தினத்திலும் விடுதலை இல்லை - திருமலையில் மக்கள் போராட்டம்

திருகோணமலை மாவட்டத்தில்  சுதந்திர தினத்திலும் தமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என தெரிவித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை காலை ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகியுள்ளது.

காணாமல் போனோர், கடத்தப்பட்டோர், சம்பூர் பகுதியில் மீள்குடியேற்றப்படாதோர், குச்சவெளியில் பாதிக்கப்பட்ட மீனவர்கள், அனல் மின்நிலையத்தால் பாதிக்கப்பட்டோர், மூதூர் படுகாடு பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் திருகோணமலையில் உள்ள பொது அமைப்புக்கள் ஆகியன இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது “காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டுபிடித்து தாருங்கள்”, நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது எப்போது?“ என்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தாங்கியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.