பொன்சேகாவினால் ஐ.தே.கட்சிக்கு தலைவலி ஏற்படும்- மஹிந்த
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பாராளுமன்றத்துடன் சம்பந்தப்படுத்திக் கொள்வது பிரச்சினைக்குரிய ஒன்று எனவும், இந்தப் பதவியை வழங்குவதற்கு இன்னும் எவ்வளவோ தகுதியானவர்கள் உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியதனால், அதிகம் நெருக்கடிகளை சந்திக்கப்போவது ஐக்கிய தேசியக் கட்சிதான் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிலபோது ஐக்கிய தேசியக் கட்சியில் யாராவது அதற்கு எதிராக குரல் கொடுத்தால், உறுப்புரிமை தொடர்பில் சட்டப் பிரச்சினை தோன்றுவதற்கு இடமிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நேற்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டாரென்பது குறிப்பிடத்தக்கது.