சிங்கத்தின் வாலைப் பிடித்திருக்கிறீர்கள் – ரோகித ராஜபக்ச எச்சரிக்கை
தனது சகோதரனான யோசித ராஜபக்சவைக் கைது செய்துள்ள இலங்கையி நல்லாட்சி அரசாங்கத்துக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளார் மகிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோகித ராஜபக்ச.
தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றிலேயே இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
”நல்லாட்சியே … நீங்கள் சிங்கத்தின் வால் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்களின் அங்கங்களை சிங்கம் கிழிக்காது என்று எதிர்பார்க்காதீர்கள்” என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், யோசித ராஜபக்ச கைவிலங்கிடப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்படும் ஒளிப்படத்தையும் அவர் பதிவேற்றியுள்ளார்.