Breaking News

வட மாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது தாக்குதல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஈ.பீ.ஆர்.எல்.ஏப் கட்சியைச் சேர்ந்த வட மாகாண சபை உறுப்பினர் ஆர் இந்திரராஜா மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வவுனியா உக்குளாங்குளத்தில் நடைபெற்ற மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு சக மாகாண சபை உறுப்பினர் எம்.பீ.நடராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த போதே அவர் மீது இந்த தாக்குதல் நடத்தபட்டுள்ளது.

மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் பண்டாரிகுளம் பகுதியில் வைத்து நேற்று இரவு எட்டு மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அவர் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வவுனியா வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.