Breaking News

சுதந்திர கட்சியின் பிளவுக்கு மைத்திரியே காரணம் – ஒன்றிணைந்த எதிர்கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீது ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா இதனைத் தெரிவித்துள்ளார்.சுதந்திர கட்சியில் பிளவு ஏற்படுமாக இருந்தால், அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான உறுப்பினர்கள் சுதந்திர கட்சியில் இருந்து பிரிந்து செல்வதற்கு எத்தனிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவும் இவ்வாறான கருத்தை அண்மையில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.