இன்று இலங்கை வருகிறார் சுஸ்மா
இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், தமிழரின் உரிமைகள் சார்ந்த பிரச்சினை குறித்து முக்கிய கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, புதுடெல்லி ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
இந்திய- இலங்கை கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ். இன்று நண்பகல் கொழும்பு வரவுள்ளார்.
இந்திய- இலங்கை கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரையும் சுஸ்மா சுவராஜ் சந்தித்துப் பேசவுள்ளார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத் தலைவர்களுடனான சந்திப்பின் போது, மீனவர்களின் பிரச்சினை விவகாரத்துக்கும், தமிழர்களின் உரிமை குறித்த விவகாரத்துக்கும், சுஸ்மா சுவராஜ் முக்கிய கவனம் செலுத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு ஆண்டில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இலங்கைக்க மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.