Breaking News

ஜெனிவா மனித உரி­மைகள் தீர்­மா­னத்தில் கையெ­ழுத்­திட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு

ஜெனிவா மனித உரி­மைகள் ஆணைக் குழுவின் இலங்கை தொடர்­பி­லான தீர்­மா­னத்தில் கையெ­ழுத்­திட்ட வெளி விவ­கார அமைச்சர் மங்­கள சமரவீர உள்­ளிட்ட அனை­வ­ருக்கும் எதி­ராக உயர் நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது. தேசத் துரோக குற்றச் சாட்டின் கீழ் இவ்­வாறு வழக்குத் தாக்கல் செய்ய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக தேசப்­பற்­றுள்ள பிக்கு முன்­ன­ணியின் செய­லாளர் பெங்­க­முவே நாலக தேரர் தெரி­வித்தார்.

கோட்ட ஸ்ரீ சம்­புத்­தா­லோக்க விகா­ரையில் நேற்­று­ ந­டை­பெற்ற இரா­ணு­வத்­தி­னரை காப்­ப­தற்­கான கையெ­ழுத்து வேட்டை நிகழ்ச்­சி­களில் ஆரம்ப உரையை நிகழ்த்தும் போதே பெங்­க­முவே நாலக தேரர் இதனைத் தெரி­வித்தார்.

சர்­வ­தே­சத்தின் தேவைக்­காக அமெ­ரிக்­கா­வினால் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்­கை­யி­லேயே மங்­கள சமரவீர கையெ­ழுத்­திட்­ட­தாக இதன் போது குறிப்­பிட்ட நாலகதேரர், அதன் அடிப்­ப­டை­யி­லேயே இரா­ணு­வத்­தினர் சிறை­களில் அடைக்­கப்­ப­டு­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

இதன் போது அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

'அமெ­ரிக்­காவின் தேவை­க­ளுக்­காக செயற்­படும் இந்த அர­சாங்கம் தேசத் துரோக அர­சாங்­க­மாகும். அதனை நான் பய­மின்றி கூறுவேன். இன்று மைத்­தி­ரி­பா­லவும் ரணி லும் இரா­ணுவ வீரர்கள் செய்த தியா­கத்­தி­னா­லேயே உயி­ருடன் உள்­ளனர் என்­பதை மறந்­து­விடக் கூடாது.

மஹிந்த ராஜ­பக் ஷ பயங்­க­ர­வா­தத்தை தோற்­க­டித்த ஒரு தேசிய தலைவர். இன்று அவ­ருடன் இருந்த அவ­ருக்கு உத­விய அனை­வரும் பழி­வாங்­கப்­ப­டு­கின்­றனர். இவற்றை நாம் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

இரா­ணு­வத்­தினர் தவ­றி­ழைத்­தி­ருந்தால் அவர்­களை மன்­னிக்­கலாம். ஏனெனில் அவர்கள் செய்த தியாகம் முக்­கி­ய­மா­னது.

அமெ­ரிக்­கா­வி­னதும் இந்­தி­யா­வி­னதும் சந்­தோ­ஷத்­துக்­காக இரா­ணு­வத்­தி­னரை சர்­வ­தேசம் மன்றில் நிறுத்­து­வதை அனு­ம­திக்க முடி­யாது. இந்த நட­வ­டிக்­கையின் பின்­ன­ணியில் சர்­வ­தேச புலம் பெயர் புலி­களின் கரங்கள் இல்­லா­ம­லில்லை. அதனால் அத­னையும் முறி­ய­டிக்க நாம் தற்­போது புதிய அமைப்­பொன்றை உருவாக்கியுள்ளோம். உலக இலங்கையர் அமைப்பு என்ற பெயரி லேயே அந்த அமைப்பு உருவாக்கப் பட்டிருக்கின்றது. புலம் பெயர் இலங்கை யர்கள் அதில் அங்கம் வகிக்கலாம். இது புலிகளின் புலம் பெயர் அமைப்பை விட சக்தி வாய்ந்தது. என்றார்.

இலங்கை கடற்­ப­ரப்பில் இயந்­திர இழு­வைப்­ப­ட­கு­களின் செயற்­பா­டுளை தடை­செய்யும் சட்­ட­மூ­லம் மீதான விவாதம் சபையில் நாளை நடை­பெ­ற­வுள்­ளது.

தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­தி­ரனால் சமர் ப்­பிக்­கப்­பட்ட இந்த சட்ட மூலம் நாளை பாரா­ளு­மன்றில் விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது

இந்த சட்ட மூல­மா­னது 1996ஆம் ஆண் டின் 2ஆம் இலக்கம் மீன்­பிடி மற்றும் நீர்­வ­ளங்கள் சட்­டத்தில் திருத்­தங்­களை வலி­யு­றுத்தி நிற்­கின்­றது.சட்ட மூல­மா­னது நிறை­வேற்­றப்­ப­டு­கின்ற போது உல­கிலே இந்த நட­வ­டிக்­கை யை சிலி நாட்டைத் தொடர்ந்து தடை செய்­கின்ற இரண்­டா­வது நாடாக இலங்கை காணப்­படும்.

அத்துடன் இலங்கை கடற்­ப­ரப்பில் இழு வை நட­வ­டிக்­கை­களை தடை செய்­வதை சட்டமூலம் வலி­யு­றுத்­து­வ­துடன் இழுவை நட­வ­டிக்­கை­க­ளுக்கு அனு­மதி வழங்கும் சட்­டங்­களில் திருத்­தங்­களை கொண்டு வருதல், இலங்கை கடற்­ப­ரப்­பு­களில் இழுவை நோக்­கங்­க­ளுக்­காக இழுவை வலை­களை வைத்­தி­ருத்தல், கொள்­வ­னவு செய்தல், இறக்­கு­மதி செய்தல் போன்­ற­வற்றை தடை செய்தல், நிய­மங்­களை மீறி இழுவை நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எதி­ராக எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­களை தெளிவாக குறிப்­பி­டுதல் ஆகிய அம்­சங்­களை கொண்­டுள்­ளது.

இது தொடர்பில் சுமந்திரன் எம்.பி. கூறுகையில்

வெளிநாட்டு மீன­வர்கள் எமது கடற்­ப­ரப்பில் மீன்­பி­டியில் ஈடு­ப­டு­வதால் எமது மீன­வர்கள், முக்­கி­ய­மாக வடக்கு மீன­வர்கள் பாரிய நெருக்­க­டிக்கு உள்­ளா­கி­யுள்­ளார்கள், இதை தடுப்­ப­தற்­கான நாம் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்ளோம், இதில் ஒரு படி­யா­கவே இந்த சட்ட மூல­மா­னது பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த இழுவை நட­வ­டிக்­கையால் மிகவும் இல­குவில் அழி­யக்­கூ­டிய கடல் வளங்­க­ளான அரு­கி­வரும் கடல் உயி­ரி­னங்­களும் பவளப் பாறை­களும் ஒரு சில விநா­டி­களில் அழிக்­கப்­ப­டு­கின்­றன. இந்த கார­ணி­க­ளுக்­கா­கவே 2015ஆம் ஆண்டு முதல் தட­வை­யாக உலகில் சிலி நாடா­னது தனது கடல் எல்­லையில் இந்த நட­வ­டிக்­கையை முற்­றாக தடை செய்­தது.

இந்­தோ­னே­சியா, நியூஸி­லாந்து, பெலிஸ், மற்றும் ஐக்­கிய அமெ­ரிக்கா போன்ற நாடு­களும் தமது கடல் எல்­லை­களில் இழுவை நட­வ­டிக்­கை­களை மட்­டுப்­ப­டுத்தி உள்­ளது. அதைப்­போ­லவே இந்­தி­யாவின் தமிழ் நாடு மற்றும் கேரளா மாநி­லங்­களில் இந்த பாரிய ஆபத்­துக்­களை குறைத்துக் கொள்­வ­தற்­காக மீன் பிடிப்­ப­தற்கு வரு­டாந்த தடை நடை­மு­றை­களை கையாண்டு வரு­கின்­றன.

எனவே, இந்த சட்டமானது நடைமுறைப் படுத்தபடுகின்ற சந்தர்ப்பத்தில் ஆழ்கடல் இழுவையானது தடை செய்யப்படுவதுடன் அது ஒரு குற்றமாக கொள்ளப்படும். குற்ற வாளியாக காணப்படுபவர் இரண்டு வருட சிறைத் தண்டனையை பெறுவதோடு ரூபா 50,000 தண்டப் பணமாக செலுத்த வேண் டிய நிலை ஏற்படும் என்றார்.