மஹிந்த, ரணிலுடன் பேச்சு, யோசித்தவுக்கு பிணை?
மகன் கைது செய்யப்பட்ட செய்தி கேள்விப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகனுக்குப் பிணை வழங்குமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கேற்ப, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு யோசித்தவின் பிணை தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, பொதுமக்கள் நிதி மோசடியுடன் தொடர்பானது என்பதனால், பிணை வழங்க முடியாது என பிரதமரிடம் எப்.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கலந்துரையாடலின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் மீண்டும் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், இதுவரையில் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் எதுவும் பொதுமக்கள் நிதி மோசடி சட்டத்தின் கீழ் பதிவாக வில்லையெனவும் முக்கிய அரசியல் கட்சியொன்று தகவல் வெளியிட்டுள்ளது