இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை– கோத்தா கூறுகிறார்
போரின் போது, இலங்கை இராணுவம் போர்க்குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அனைத்துலக போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பத்து இலட்சம் கையொப்பங்களைத் திரட்டும் போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, படையினர் மீது போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.இலங்கைக்கு வந்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், தெரிவு செய்யப்பட்ட சிலரை மட்டுமே சந்தித்துப் பேசுகிறார்.இலங்கையில் சில மணித்தியாலங்கள் தங்கியிருப்பதால், இங்குள்ள கள நிலவரங்களை எப்படி மதிப்பிட முடியும்? இது ஒரு நகைச்சுவை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.