தனிப்பட்ட தேவைகளுக்காக யாரையும் கைது செய்யவில்லை:- ஜனாதிபதி
கைதுகளின் பின்னணியில் அரசியல் பழிவாங்கல்கள் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களே கைது செய்யப்படுகினறர். மாறாக எனது தனிப்பட்ட தேவைக்காக இந்த கைதுகள் இடம்பெறவில்லை என மைத்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.அமைச்சர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது மைத்திரி இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இடம்பெறும் கைதுகள் அரசியல் பழிவாங்கல்கள் என கூறுவதாக நான் அறிந்தேன். இவை அனைத்தும் எனது அவசியத்திற்கமைய மேற்கொள்ளப்பட்டதாக பலர் கூறுகின்றார்கள். எனினும் இந்த விசாரணைகளுக்கு ஒரு போதும் நான் தலையிடவில்லை என்பதனை நான் தெளிவாக கூற வேண்டும்.
ஷிரந்தி ராஜபக்ச விசாரணைக்கு அழைப்பட்ட சந்தர்ப்பத்தில் நான் இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தேன். இந்த குற்றச்சாட்டு கடுமையானதெனவும், இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால் பிணை கிடைக்காதெனவும் தெரிந்து கொண்டேன். எனவே அவர் பெண் என்பதனால் நாங்கள் இது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டு தீர்மானம் எடுப்போம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்சவை கைது செய்வதில்லை என தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரி மேலும் தெரிவித்தார்.ஷிரந்தி ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கைது செய்வதில்லை என தீர்மானித்ததனை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.