இராணுவமய நீக்கம் நல்லிணக்கத்துக்கு முக்கியம் – ஒப்புக்கொண்டார் வெளிவிவகார அமைச்சர்
இராணுவமய நீக்கம் என்பது நல்லிணக்கத்தின் முக்கியமான ஒரு பகுதி என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஏற்றுக்கொண்டுள்ளார்.
வொசிங்டனில் உள்ள அமைதிக்கான அமெரிக்க நிறுவகத்தில் நடந்த கருத்தரங்கில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஹெரிரேஜ் பவுண்டேசனின் ஆய்வாளரான லிசா கேட்டிஸ் இந்த கேள்வி – பதில் உரையாடலை நெறிப்படுத்தியிருந்தார்.இதன்போது, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மங்கள சமரவீர, அதுபற்றிய விசாரணைகள் நடப்பதாக குறிப்பிட்டார்.
ஊடக சுதந்திரம் தொடர்பான மற்றொரு கேள்விக்கு அவர், சிறிலங்காவில் தற்போது முழுமையான, கருத்துச் சுதந்திரம் இருப்பதாக தெரிவித்தார்.அதேவேளை, இலங்கையில் உள்ள, தம்மை மதத்தலைவர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலர் அவநம்பிக்கைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.