நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்!
தென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளார்.
முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ள குமரிமுத்து, தி.மு.க., பேச்சாளராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.