Breaking News

தேசிய கீதம் தமிழில் பாடப்­பட்­டதை எதிர்ப்­போரை கணக்­கி­லெ­டுக்க மாட்­டோம்! என்­கிறார் சம்­பிக்­க

நாட்டின் ஐக்­கி­யத்தை பலப்­ப­டுத்தி நல்­லாட்­சியை முன்­னெ­டுத்து செல்லும் இந்த அர­சாங்­கத்தில் ஐக்­கி­யத்தை வெளிப்­ப­டுத்தும் ஒரு நல்ல எடுத்­துக்­காட்­டா­கவே இந்த சுதந்­தி­ர­தினம் அமைந்­துள்­ளது. இரண்டு மொழி­க­ளிலும் தேசிய கீதம் பாடப்­பட்­டமை சமத்­து­வத்தின் அடை­யாளம் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

ஒற்­றை­யாட்­சியில் சமத்­துவ பயணம் பல­ம­டையும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் ஒரு சாரார் கருத்­துக்­களை தெரி­வித்து வரு­வது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டில் ஜன­நா­ய­கத்­தையும், நல்­லாட்­சி­யையும் பலப்­ப­டுத்தி ஒரு ஆண்டு நிறை­வ­டைந்­துள்­ளது. இந்த ஓராண்டு காலத்தில் நாட்டில் மூவின மக்­களும் அமை­தி­யாக வாழக்­கூ­டிய நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. அதேபோல் சட்ட, நீதி செயற்­பா­டுகள் சுயா­தீ­னப்­ப­டுத்­தப்­பட்டு மக்கள் நீதி செயற்­பாட்டின் மீது நம்­பிக்கை கொண்டு செயற்­படும் வகையில் ஆரோக்­கி­ய­மான சூழல் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நல்­லாட்­சியில் ஊழலும், மோச­டி­களும் முழு­மை­யாக அழிக்­கப்­பட்டு குற்­ற­வா­ளி­களும் தண்­டிக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு பல எடுத்­துக்­காட்­டுகள் இந்த ஆட்­சியில் நடந்­துள்­ளன.

அதேபோல் ஊழல், மோச­டிகள் இல்­லாத ஒரு அர­சியல் கலா­சாரம் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. முக்­கி­ய­மாக சிறு­பான்மை மக்­களை இணைத்­துக்­கொண்டு ஐக்­கிய இலங்கை என்ற நிலையில் செயற்­படும் வாய்ப்­புகள் அதி­க­மாக ஏற்­பட்­டுள்­ளன. அதற்கு நல்ல எடுத்­துக்­காட்­டாக இம்­முறை சுதந்­தி­ர­தின வைப­வத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்­­பட்­ட­மையை குறிப்­பி­டலாம். இந்த செயற்­பாடு ஐக்­கிய இலங்­கைக்குள் சமத்­து­வ­மான வகையில் மக்கள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளனர் என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

நல்­லாட்­சியில் மூவின மக்­களின் பிர­தி­நி­தித்­து­வங்­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. எனவே கடந்­த­கால விமர்­ச­னங்கள், அழுத்­தங்கள் அனைத்­திற்கும் இந்த சுதந்­தி­ர­தின நிகழ்வு முற்­றுப்­புள்ளி வைத்­துள்­ளது.

நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் ஒரு சிலரின் செயற்­பா­டு­களும் இருந்து வரு­கின்­றன. அதை பற்­றிய கவலை எமக்கு இல்லை. நாம் ஐக்­கிய இலங்­கைக்குள் அனைவருக்குமான அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றோம். அதை ஒருசிலர் குழப்ப நினைக்கின்றனர். ஆனால் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. அதேபோல் ஒற்றையாட்சிக்குள் சமத்துவமான ஒரு பயணத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.