சம உரிமைகளை உறுதி செய்ய செயற்படுவோம் - மங்கள
சம உரிமைகளை உறுதி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புரீதியான உறவை தொன்றுதொட்டு பேணிவருகிறது. இந்தநிலையில் மீண்டும் இலங்கை சர்வதேச சமூகத்துடன் இணைப்புடன் செயற்பட்டு இன்று அந்த சமூகத்தில் உரிய இடத்தையும் பெற்றுள்ளது.
இந்தநிலையிலேயே துடிப்பான வெளிநாட்டுக் கொள்கை ஒன்றுக்காக இலங்கை அர்ப்பணி;ப்புடன் செயற்படுவதாக மங்கள குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு சமூக அபிவிருத்திக்கும் தமது பங்களிப்பை வழங்க வேண்டு;ம் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு அவர் இந்த கருத்துக்கள் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்