Breaking News

ஜெனீவா தீர்மானம் தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஏப்ரலில்

ஜெனீவா யோசனையை எந்த முறையில் செயற்படுத்துவது என்பது தொடர்பிலான ஆலோசனையை பெற்றுக் கொள்ள நியமிக்கப்பட்ட குழு எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. 

மனோரி முத்தேட்டுவவின் தலைமையின் கீழ் 11 பேர் அடங்கிய குழு இதன்பொருட்டு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்படி அவர்கள் கடந்த வௌ்ளிக்கிழமை முதல் நேற்று வரை யாழ்ப்பாண மக்களிடம் கருத்துக்களை பதிவு செய்தனர். இதன்போது பொதுமக்கள் மட்டுமன்றி பிரதேசத்திலுள்ள மூப்படையின் பிரதானிகளிடமும் கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக, அந்தக் குழுவின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.