Breaking News

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் - சுரேஸ் கோரிக்கை

வடக்கிலே விடுதலை புலிகள் இருந்தார்கள் என்பதற்காக தனியாருடைய காணிகளை சூறையாடும் வேலையை இராணுவம் மேற்கொள்ள முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் ஒரு சிவில் நிர்வாகத்தினை ஏற்படுத்த வேண்டுமானால் தேவைக்கு மேலதிகமாக உள்ள இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

யாழ். கட்டைப்பிராயில் உள்ள அவரது இலத்தில் நேற்ற (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :-

‘கடந்த சில நாட்களுக்கு முன்பு முழங்காவிலில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரிய விடுதிக்குள் இரவு நுழைந்த அருகிலுள்ள இராணுவ முகாமை சேரந்த இரானுவத்தினர் அங்கிருந்தவர்களை வெருட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். இவை போன்ற மேலும் பல அடாவடித்தனங்கள் வெறுபல இடங்களிலும் இடம்பெற்றிருந்தன.

அரசாங்கம் தேவையற்ற இடங்களுக்களில் இராணுவத்தினரை வைத்திருப்பதே இவ்வாறான நிலைக்கு காரணமாகும். உண்மையில் இராணுவத்தை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இடத்தில் வைத்திருக்க வேண்டுமே ஒழிய பொதுமக்களது காணிகளிலும் பாடசாலைகளுக்கு அண்மையிலும் அல்ல.

இவ்வாறான இராணுவ பிரசனத்தால் தமிழ் மக்களுக்கு கலாச்சார ரீதியான, கல்வி ரீதியான பொருளாதார ரீதியான பல்வேறு பிரச்சனைகளுடன் அச்சுறுத்தலான நிலமையையே ஏற்படுட்டுள்ளது.

மேலும் வலிகாமம் வடக்கில் இருந்து மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டுமல்ல வடக்கு மாகாணத்திலுருந்தே இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்பதை இரானுவத்தின் ஒவ்வொரு செயற்பாடும் காட்டுகின்றது.

எனவே வடக்கிலே விடுதலை புலிகள் இருந்தார்கள் என்பதற்காக தனியாருடைய காணிகளை அபகரிக்கினற வேலையை இராணுவம் மேற்கொள்ள முடியாது.

அத்துடன் சாதரனமான ஒர் சூழலை உருவாக்க வேண்டுமானால் தேவையற்ற விதத்தில் மேலதிகமாக உள்ள இராணுவத்தை அரசாங்கம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.