மகசீன் சிறைச்சாலையின் சகல அரசியல் கைதிகளும் போராட்டத்தில்
கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையின் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
பயங்கவராத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்குமாறு வலியுறுத்தி, மகசீன் சிறைச்சாலையின் 15 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 23ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களில் ஒருவர் கடந்த வாரம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 14 பேரும் ஏழாவது நாளாக இன்றைய தினமும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மகசீன் சிறைச்சாலையின், ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் இன்றைய தினம் குறித்த போராட்டத்தில் இணைந்துள்ளதாக அருட்தந்தை சக்திவேல் குறிப்பிட்டார்.