பிளவுற்றது மஹிந்த அணி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்படும் கூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதுடன், அவர்களுக்கு பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு பயணத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் இது குறித்து உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து தம்மை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று குறிப்பிடுவோர், நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கவும், தங்களை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக அங்கிகரிக்குமாறும் கோரி வருகின்றனர்.
இவ்வாறான ஒரு நிலையில், அண்மையில் கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது, கூட்டு எதிரணியாக செயற்படமுடியாதெனவும், பொது எதிரணியென்ற அடையாளத்தையோ சுயாதீனத்தையோ அங்கீகரிக்க முடியாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மஹிந்தவிற்கு ஆதரவாக செயற்பட்டு வந்த எதிரணி உறுப்பினர்கள் இருவர், உடனடியாக ஜனாதிபதியையும், சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களையும் சந்தித்து தமது அபிப்பிராயங்களைத் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பினைத் தொடாந்தே அவர்கள் இருவருக்கும் பிரதியமைச்சுப் பதவிவகள் வழங்கப்படவுள்ளதாக அரசியல் தகவல்கள் குறிப்பிடுகின்றன.