கோப்பாபிலவு மக்களை மீள்குடியமர்த்தல் -பிரேரணை சபையில் நிறைவேற்றம்
இடம்பெயர்ந்துள்ள முல்லைத்தீவு கோப்பாபிலவு மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியர்த்துவது குறித்து வடமாகாண சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் 45ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில், கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபையின் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.
அதன்போது கேப்பாப்பிலவில் இராணுவம் பிடித்து வைத்துள்ள மக்களின் காணிகள் மற்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வீதிi ஆகியவற்றை விடுவிக்க வலியுறுத்தி ஆளும்கட்சி உறுப்பினர் ரவிகரனால் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய அவர், யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், கேப்பாப்பிலவு மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை.
அதுமட்டுமின்றி பிரதான பாதையும் மூடப்பட்டுள்ளதால், அடர்ந்த காட்டின் ஊடாக மக்கள் பாதுகாப்பற்ற வகையில் பயணிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கோப்பாபிலவு மக்கள் மக்கள் தற்காலிகமாக வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டு ஏமாற்றப்பட்டு வருகின்ற நிலையில், அந்த மக்களின் கோரிக்கையை நிறைவேற்று அவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.