நாட்டினதும், படையினரதும் கௌரவம் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி வாக்குறுதி
இலங்கை மக்களினதும், படையினரினதும் கௌரவத்தைப் பாதிக்காத வகையிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று காலை காலி முகத்திடலில் நடந்த இலங்கையின் 68வது சுதந்திர நாள் நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், நிறைவேற்ற வேண்டிய விடயங்களை நிறைவேற்றத் தவறியதால் தான், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்ரெம்பர் மாதம், சிறிலங்கா பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும், இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்படும் போது, இலங்கை மக்களினதும், படையினரினதும் கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மக்களினதும், படையினரதும், கௌரவம் பாதிக்கப்படாத வகையில் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த சந்தர்ப்பத்தில், உங்களை, நாட்டை, படையினரை, நாட்டின் இறைமையை, பாதுகாப்பேன் என்று உறுதியளிக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ய