Breaking News

மஹிந்தவின் குண்டர்களால் உயிர் அச்சுறுத்தல்: சந்திரிக்கா

மஹிந்த ராஜபக்ஷவின் பக்கமுள்ள குண்டர்களாலும், கொலையாளிகளாலும் எமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆனால் எந்த அச்சுறுத்தலாலும ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இது கட்சியை சீரழிப்பதற்கான முதல் முயற்சி அல்ல. பல ஆண்டுகளாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்ட வண்ணமே உள்ளது. ஆனால் கட்சியை பிளவுபடுத்தும் எண்ணத்தை யாராலும் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது.

17 வருடங்களாக தாக்கப்பட்டு வந்த நாம் இறுதியில் மீண்டும் கட்சியைக் கட்டியெழுப்பினோம். அது போன்று கட்சியை மீண்டும் மக்கள் பலமுள்ள கட்சியாக மீளக் கட்டியெழுப்புவேன்.

தற்போதைய பிரச்சினை பாரிய பிரச்சினை அல்ல. அவை வழமையாக கட்சிகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சினையே எனவும் சந்திரிக்கா மேலும் குறிப்பிட்டார்.