Breaking News

என்னை தனியே வருமாறு இராணுவத்தினர் அழைத்தனர்!- காணாமல்போனவரின் தாயார் தகவல்

என்னை தனியே வருமாறு இராணுவத்தினர் அழைத்தனர் என காணாமல் போன ஒருவரின் தாய் இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற சுதந்திர தின பகிஸ்கரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது மகன் ஜோசப்பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட தினத்தில் சாவகச்சேரி பகுத்தியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவும், இவருடன் 3 பேர் அன்றைய தினம் கைது செய்து இருவரை கிராம சேவையாளர் முன்னிலையில் விடுதலை செய்தனர்.

தனது மகன் வன்னி மாவட்டம் என்றதனால் விடுதலை செய்யவில்லை எனவும் தன்னை தனியே வருமாறும் பிள்ளையை காட்டுவதாகவும் கூறி அழைத்ததாகவும் தனது மகன் இறந்தாலும் பறவாயில்லை என தான் செல்லவில்லை என கண்ணீர் மல்க தாயார் கூறினார்.