Breaking News

ஞானசார தேரரைப் பிணையில் விடுவித்தது நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை ஹோமகம நீதிமன்றம் இன்று பிணையிில் செல்ல அனுமதித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், ஹோமகம நீதிமன்றத்தினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து. காவல் நிலையத்தில் சரணடைந்த ஞானசார தேரரை கடந்த மாதம் 26ஆம் நாள், விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, அவர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.அதன் பின்னர், ஞானசார தேரருக்கு பிணை வழங்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் ஹோமகம நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இன்று விளக்கமறியல் காலம் முடிந்து, ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை தலா ஒரு இலட்ச ரூபா பெறுமதியான இரண்டு பேரின் ஆட்பிணையில் செல்வதற்கு நீதிவான் அனுமதி அளித்தார்.