Breaking News

யோசித இப்போதும் நிரபராதியே! என்கிறது கடற்படை

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லெப்.யோசித ராஜபக்ச மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை, அவருக்கு எதிராக கடற்படை நடவடிக்கை எதையும் எடுக்காது என்று கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

தற்போது லெப். யோசித ராஜபக்ச விளக்கமறியலில் தான் வைக்கப்பட்டுள்ளார். அவர் இப்போதும் நிரபராதியே.

நீதிமன்றம் அவரை குற்றவாளியாக காணும் வரை, அவர் மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கடற்படை யோசிக்கவில்லை. அவரை பணியில் இருந்து இடை நிறுத்தவும் இல்லை.

யோசித ராஜபக்ச கடற்படையில் இணைந்து கொண்ட விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை மேற்கொள்கிறது. அது தொடர்பாக மேலதிக தகவல்களை இப்போதைக்கு வெளியிடுவது பொருத்தமற்றது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.